ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளம் பெண் உள்பட இருவர் கைது! - chennai district news

சென்னை: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளம்பெண் உள்பட இருவரை காவல் துறையினர் கைது செய்து அவர்களை புழல் சிறையில் அடைத்தனர்.

arrested for selling cannabis
arrested for selling cannabis
author img

By

Published : Oct 28, 2020, 12:34 PM IST

சென்னை ஆர்.கே.நகர் பகுதிக்கு உள்பட்ட மணலி சாலையில் சட்டம் ஒழுங்கு உதவி ஆய்வாளர் பிரவீன் தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த இருசக்கர வாகனத்தை மடக்கி விசாரித்தபோது அந்த நபரும் பின்னால் அமர்ந்திருந்த பெண்ணும் முன்னுக்கு முரணாக பதில் அளிக்கவே காவல் நிலையம் அழைத்து விசாரித்தபோது அவர்கள் வைத்திருந்த கைப்பையில் இரண்டரை கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

விசாரணையில் ஆந்திராவிலிருந்து கஞ்சா பொட்டலங்களை வாங்கி வந்து இருசக்கர வாகனத்தில் வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அவர்களை புழல் சிறையில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details