சென்னை: அண்ணா நகரிலுள்ள அன்னை சத்யா நகர் 10ஆவது தெருவில் வசித்து வந்தவர் மகாலட்சுமி (26). இவரது கணவர் விஜயகுமார், வேலையில்லாமல் வீட்டில் இருந்து வரும் நிலையில், இவர்களுக்கு 2 ஆம் வகுப்பு மற்றும் எல்கேஜி படிக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். எனவே குடும்பத்தைக் காப்பாற்ற மகாலட்சுமி அண்ணா நகரிலுள்ள தனியார் உடற்பயிற்சி கூடம் ஒன்றில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்தார்.
கடந்த 2 மாதங்களுக்கு முன் அதே பகுதியிலுள்ள 8ஆவது தெருவில் வசித்து வந்த அண்ணா நகர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி ராபர்ட், மகாலட்சுமியிடம் தரக்குறைவாகப் பேசி தனது பாலியல் இச்சையை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், தனது ஆசைக்கு இணங்க மறுத்தால் கணவர் மற்றும் குழந்தைகளை கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளார்.
இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அண்ணா நகர் காவல் துறையினர் ராபர்ட் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் நேற்று (செப்.18) மகாலட்சுமியின் கணவர் விஜயகுமார் தனது உறவினருடன் சகோதரர் மகன் பிறந்தநாள் விழாவிற்காக பத்திரிக்கை வைக்கச் சென்றுவிட்டனர்.