சென்னை: டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக கிரெட்டா தன்பர்க் ட்வீட் செய்திருந்தார். இந்த ட்வீட்டை சூழியல் செயற்பட்டாளர் திஷா ரவி தனது ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதனுடன் டூல்கிட்டையும் இணைத்திருந்தார். இந்த டூல்கிட்டை காலிஸ்தான் ஆதரவு இயக்கங்கள் உருவாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த டூல்கிட் சர்ச்சையில், பெங்களூரைச் சேர்ந்த திஷா ரவி நேற்று இரவு கைது செய்யப்பட்டார். திஷா ரவியின் கைதுக்கு இந்தியா முழுவதும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், பூவுலகின் நண்பர்கள், அரசியலுக்காக இளைஞர்கள் (young people for politics) உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தோர் இன்று(பிப்.15) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.
அப்போது பேசிய பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பிரபாகர், "நாட்டின் உணவு உற்பத்தியை அம்பானி, அதானி நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் தரகராக செயல்படும் மத்திய அரசு, காலநிலை மாற்றம் குறித்து எவ்வித அக்கறையும் இன்றி செயல்படுகிறது.