சென்னை அடுத்த குரோம்பேட்டை சிட்லப்பாக்கம் பெரியார் நகரில் வசிப்பவர் வெங்கடேசன் (29) என்பவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்தார். இந்நிலையில் அவர் நேற்று அதே பகுதியில் துக்க நிகழ்வுக்கு சென்றுவிட்டு தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார்.
நண்பர்களுடன் சேர்ந்து ஏரியில் குளிக்கச் சென்ற இளைஞர் உயிரிழப்பு - சிட்லபாக்கம் ஏரி
சென்னை: துக்க நிகழ்விற்குச் சென்றுவிட்டு நண்பர்களுடன் சேர்ந்து ஏரியில் குளிக்கச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
![நண்பர்களுடன் சேர்ந்து ஏரியில் குளிக்கச் சென்ற இளைஞர் உயிரிழப்பு நண்பர்களுடன் சேர்ந்து ஏரியில் குளிக்க சென்ற வாலிபர் உயிரிழப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10113658-thumbnail-3x2-chedead.jpg)
நண்பர்களுடன் சேர்ந்து ஏரியில் குளிக்க சென்ற வாலிபர் உயிரிழப்பு
இதையடுத்து நண்பர்களுடன் சேர்ந்து சிட்லப்பாக்கம் ஏரியில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது வெங்கடேசன் எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்குச் சென்று நீரில் மூழ்கிவிட்டார்.
இதையும் படிங்க:நீட் தேர்வு மோசடி விவகாரம் - இடைத்தரகரை தேடும் போலீஸ்!
TAGGED:
young man died in lake