தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடும்பத் தகராறு: குரோம்பேட்டை எம்ஐடி மேம்பாலத்திலிருந்து விழுந்த இளைஞருக்குத் தீவிர சிகிச்சை - சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை: குடும்பத் தகராறு காரணமாக குரோம்பேட்டை எம்ஐடி மேம்பாலத்திலிருந்து விழுந்த இளைஞருக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

எம்ஐடி மேம்பாலத்திலிருந்து விழுந்த இளைஞர்
எம்ஐடி மேம்பாலத்திலிருந்து விழுந்த இளைஞர்

By

Published : Apr 16, 2021, 4:24 PM IST

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (34). இவர் சென்னை அமைந்தகரையில் உள்ள பிரியாணி கடையில் வேலை செய்துவருகிறார். கடந்த 2 நாள்களுக்கு முன்பு பிரியாணி கடை உரிமையாளரிடம் ஊருக்குச் செல்வதாக மாரிமுத்து விடுமுறை வாங்கினார்.

ஆனால் அவர் ஊருக்குச் செல்லாமல் தாம்பரம் பகுதியில் சுற்றித் திரிந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று (ஏப்ரல் 16) பல்லாவரம் அடுத்த குரோம்பேட்டை எம்ஐடி மேம்பாலத்திலிருந்து ஜிஎஸ்டி சாலையில் சென்றுகொண்டிருந்த கார் மீது திடீரென மாரிமுத்து விழுந்தார்.

எம்ஐடி மேம்பாலத்திலிருந்து விழுந்த இளைஞர்

இதையடுத்து ரத்த வெள்ளத்திலிருந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு சக வாகன ஓட்டிகள் அனுப்பிவைத்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காவல் துறையினர் விசாரணையில் அவர் குடும்பத் தகராறு காரணமாகத் தற்கொலைக்கு முயன்றதாகத் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: நடுரோட்டில் பெட்ரோல் ஊற்றி தீவைத்து தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி

ABOUT THE AUTHOR

...view details