தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் 3,500 கடந்த கரோனா உயிரிழப்பு!

சென்னையில் இதுவரை கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 500ஐ கடந்துள்ளது என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கரோனா தொற்று
கரோனா தொற்று

By

Published : Oct 18, 2020, 1:20 PM IST

Updated : Oct 18, 2020, 2:44 PM IST

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையானது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனைக் குறைப்பதற்கு அந்தந்தப் பகுதிகள் முழுவதிலும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டதோடு, தொடர்ந்து மாநகராட்சி சார்பில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

இருப்பினும், அண்ணா நகர், கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் கரோனா தொற்றானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கோடம்பாக்கத்தில் 20 ஆயிரத்து 712 நபர்களும், அண்ணா நகரில் 20 ஆயிரத்து 816 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த இரண்டு மண்டலங்களுக்கு அடுத்தபடியாக தேனாம்பேட்டையில் மற்றும் ராயபுரத்தில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. தேனாம்பேட்டையில் 17 ஆயிரத்து 934 நபர்களும், ராயபுரத்தில் 17ஆயிரத்து 191 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா தொற்றானது அதிகரித்து வருவதால் தற்போது கரோனா பரிசோதனைகளும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று (அக்.17) மட்டும் 13,353 கரோனா பரிசோதனை செய்துள்ளனர். தினமும் கரோனா தொற்று அதிகரிப்பது போல அதிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

மேலும் சென்னையில் மட்டும் இதுவரை கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 3500 கடந்துள்ளது. இதன் மொத்த எண்ணிக்கையானது 3504 ஆகும். இதனால் இம்மாவட்டத்தில் உயிரிழந்தோரின் விழுக்காடானது 1.85 சதவீதமாக உள்ளது.

அதன்படி கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது மண்டல வாரியான பட்டியல் வருமாறு.

மண்டலம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை
கோடம்பாக்கம் 1138
அண்ணா நகர் 1219
ராயபுரம் 757
தேனாம்பேட்டை 1021
தண்டையார்பேட்டை 701
திரு.வி.க. நகர் 1004
அடையாறு 999
வளசரவாக்கம் 782
அம்பத்தூர் 839
திருவொற்றியூர் 391
மாதவரம் 479
ஆலந்தூர் 692
சோழிங்கநல்லூர் 289
பெருங்குடி 489
மணலி 199

இதையும் படிங்க:இருசக்கர வாகம் மீது டிப்பர் லாரி மோதி விபத்து; ஒருவர் உயிரிழப்பு! சிசிடிவி காட்சிகள்...

Last Updated : Oct 18, 2020, 2:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details