தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செல்ஃபி எடுக்கும்போது தடுமாறி கூவத்தில் விழுந்த இளைஞர் - coovam river

சென்னை நேப்பியர் பாலம் அருகே செல்ஃபி எடுத்த இளைஞர் ஒருவர், தவறி கூவம் ஆற்றுக்குள் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

selfie
நேப்பியர் பாலம்

By

Published : Apr 12, 2021, 10:29 AM IST

சென்னையில் நேப்பியர் பாலம் அருகே இன்று (ஏப்ரல் 12) காலை 7.15 மணியளவில், செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர் ஒருவர், தவறி கூவம் ஆற்றுக்குள்ளேயே விழுந்துவிட்டார்.

இதையறிந்த அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்கும், மீட்புப் படையினருக்கும் தகவல் அளித்தனர். தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர், ஆற்றில் தத்தளித்துக்கொண்டிருந்த அந்நபரைப் பத்திரமாக மீட்டு முதலுதவி அளித்தனர்.

செல்ஃபி எடுக்கும்போது தடுமாறி கூவத்தில் விழுந்த இளைஞர்

விசாரணையில், அந்நபர் கொடுங்கையூரைச் சேர்ந்த மூர்த்தி என்பதும், ஸ்பென்சர் பிளாசாவில் டாட்டா கன்சல்டன்சியில் டீம் லீடராகப் பணிபுரிந்துவருவதும் தெரியவந்தது.

செல்ஃபி எடுக்கும்போது தவறி கீழே விழுந்துவிட்டதாகத் தெரிவித்த அவர், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

இதையும் படிங்க:போதைப்பொருள்கள் விற்ற நால்வர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்!

ABOUT THE AUTHOR

...view details