சென்னை ஆர்.கே. நகர் தண்டையார்பேட்டை கருணாநிதி நகரைச் சேர்ந்தவர் குமார். சந்தைப் பகுதியில் சிறிய கடை நடத்திவருகிறார். இவரது மகன் கௌதம் (19). இவர், தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இளங்கலை படித்துவந்தார்.
இந்நிலையில், இன்று (பிப். 12) மதியம் உணவு இடைவேளைக்காகச் செல்வதற்கு தனது மகன் கௌதமை கடைக்கு அழைத்துள்ளார்.
பின்னர், கடைக்கு வந்த கௌதம் மின்விசிறி போடுவதற்காக ஸ்விட்சை போட்டுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் அவர் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.