சென்னை: தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர், இரும்புலியூர் இடையே உள்ள தண்டவாளத்தில் 29 வயது மதிக்க தக்க வடமாநில இளைஞர் தலை துண்டான நிலையில் இருப்பத்தை கண்ட அவ்வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியடைந்து தாம்பரம் இருப்புபாதை போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரனையில், அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த ஹூண்டுகோகு என்பதும் நேற்று இரவு ஒரு மணியளவில் தனது சொந்த ஊரில் இருந்து தனது மைத்துனருடன் தாம்பரம் ரயில் நிலையம் வந்த போது ஹூண்டு தான் இயற்கை உபாதை கழித்துவிட்டு வருவதாக கூறிவிட்டு சென்றவர் வெகு நேரமாகியும் திரும்பாதது தெரியவந்துள்ளது.