தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விசாரணைக்கு அழைத்து சென்ற இளைஞர் விஷம் அருந்தி தற்கொலை - காவல் நிலையம் சென்று வந்த இளைஞர் தற்கொலை

சென்னை அபிராமபுரத்தில் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்ற இளைஞர் வீட்டிற்கு வந்து விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

விசாரணைக்கு அழைத்துச் சென்ற இளைஞர் விஷம் அருந்தி தற்கொலை
விசாரணைக்கு அழைத்துச் சென்ற இளைஞர் விஷம் அருந்தி தற்கொலை

By

Published : Mar 7, 2022, 10:43 AM IST

Updated : Mar 7, 2022, 1:23 PM IST

சென்னை: அபிராமபுரத்தைச் சேர்ந்தவர் சங்கரி. இவரது மூத்த மகன் ஹரிஷ் (25) கார்பென்டராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை (மார்ச் 05) அபிராமபுரம் காமராஜர் சாலையிலுள்ள ஒரு உணவகத்தில் தனது நண்பர்களுடன் சென்ற ஹரிஷ் உணவருந்தியுள்ளார்.

அப்போது, பணம் கொடுப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் உணவக ஊழியர்கள் அபிராமபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, ஹரிஷ் உடன் இருந்த அவரது நண்பர்கள் சென்றுவிட ஹரீஷை மட்டும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

பின்னர் சிறிது நேரத்தில் எழுதி வாங்கிவிட்டு அவரை அனுப்பி விட்டதாகவும் வீட்டிற்கு வந்த ஹரிஸ் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 06) 1:30 மணியளவில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் ஹரிஷை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் உயிரிழந்த விட்டதை உறுதிப்படுத்தினர்.

ஹரிஷின் இறப்பிற்கு அபிராமபுரம் காவல் துறையினரின் துன்புறுத்தலே காரணம் என உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். காவல் நிலையத்தில் வைத்து தாக்கியதால்தான் அவமானம் தாங்காமல் தனது மகன் தற்கொலை செய்து கொண்டதாகவும், காவல் நிலையத்திற்கு வெளியில் வந்ததும் காவலர்களை பார்த்து "எனது சாவுக்கு நீங்கதான் காரணம்" என கூறியதாகவும், சொன்னது போலவே தனது மகன் தற்கொலை செய்து கொண்டதாக ஹரிஷின் தாயார் சங்கரி கண்ணீர் விட்டு அழுதார்.

உயிரிழந்த ஹரிஷ் நேற்றிரவு ஒரு உணவகத்தில் சாப்பிட்ட பிரியாணிக்கு பணம் கொடுக்காமல் தனது செல்ஃபோனை வைத்துக் கொள்ளுமாறு கூறியதால் இரு தரப்புக்கும் பிரச்சினை ஏற்பட்டதாகவும், காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து வந்தது உண்மைதான். ஆனால், அவரை தாக்கவில்லை எனவும் அவர் போதையில் இருந்ததால் பத்து நிமிடத்தில் வீட்டிற்கு அனுப்பி விட்டதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஹரிஷ் கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கங்களுக்கு அடிமையானவர் எனவும், இரண்டு முறை போதை மறுவாழ்வு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்றவர் எனவும் அபிராமபுரம் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:பொக்லைன் இயந்திரம் அருகே உறங்கியவர் உடல் நசுங்கி உயிரிழப்பு

Last Updated : Mar 7, 2022, 1:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details