தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மயிலாப்பூரில் இளைஞர் வெட்டிக் கொலை...! - இளைஞர் வெட்டிக் கொலை

சென்னை: மயிலாப்பூரில் முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவரை நான்கு பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது.

young man brutally slaughtered for four-man gang in chenani
young man brutally slaughtered for four-man gang in chenani

By

Published : Apr 22, 2020, 12:09 PM IST

சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் வசந்த் (17). இவர் மெக்கானிக்காக பணிபுரிந்துவந்தார். இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 21) அவரது வீட்டின் அருகே செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் வசந்த்தை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றது.

இதையடுத்து, ரத்த வெள்ளத்தில் கிடந்த வசந்த்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், வசந்த்திற்கும், அதே பகுதியைச் சேர்ந்த சரத் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாகவும், இதனால் தனது நண்பர்களுடன் சேர்ந்து வசந்த்தை வெட்டிக் கொலை செய்ததும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, தலைமறைவாகியுள்ள சரத் உள்ளிட்ட நான்கு பேரை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: திருமணத்தை மீறிய உறவுக்கு தடையாய் இருந்த மகன் கொலை: தாய் கைது!

ABOUT THE AUTHOR

...view details