தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோவில் கைது - பாலியல் வழக்கு

தண்டையார்பேட்டையில் வீட்டு உரிமையாளரின் 15 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இளைஞர் போக்சோவில் கைது
இளைஞர் போக்சோவில் கைது

By

Published : Jul 13, 2021, 10:42 AM IST

சென்னை: தண்டையார்பேட்டை வினோபா நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் நஜூகான் (31). இவர், வீட்டு உரிமையாளருக்கு வீட்டு வாடகை கொடுக்காமல் மூன்று மாத காலமாக அலைக்கழித்து வந்துள்ளார். இதனால், வீட்டு உரிமையாளர் இளைஞரிடம் வீட்டு வாடகையை தரும்படி வற்புறுத்தி வந்துள்ளார்.

இதனால் கோபமடைந்த இளைஞர், வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து வீட்டு உரிமையாளரின் 15 வயது மகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனையறிந்த வீட்டு உரிமையாளர் உடனடியாக காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் வருவதற்குள் அந்த இளைஞர் தலைமறைவாகியுள்ளார்.

இளைஞர் போக்சோவில் கைது:

இந்நிலையில், வெகு நாள்களுக்குப் பிறகு இன்று (ஜூலை 13) திடீரென தண்டையார்பேட்டை வினோபா நகர் பகுதியில் நஜூகான் வலம்வந்துள்ளார். இதனைக் கண்ட பொதுமக்கள் அவரை பிடித்து அடித்து உதைத்து, காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இளைஞருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

இதனைத் தொடர்ந்து நஜூகானை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த காவல் துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்த இளைஞருக்கு போக்சோ

ABOUT THE AUTHOR

...view details