சென்னை:அம்பத்தூரை அடுத்த புதூர், சித்து ஒரகடத்தைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர், அதே பகுதியில் தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 17ஆம் தேதி சிறுமி வீட்டிலிருந்து கடைக்குச் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது, சிறுமியை பின்தொடர்ந்து வந்த இளைஞர் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர், சிறுமியை புகைப்படம் எடுத்ததோடு மட்டுமல்லாமல், காதலிக்க சொல்லி வற்புறுத்தியுள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து உடனடியாக அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.