சென்னை: தாம்பரம் அடுத்த அகரம் தென் ஊராட்சி பதுவஞ்சேரியைச் சேர்ந்தவர் முருகன் (37). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்தநிலையில் மூன்று நாள்களுக்கு முன்பு அவருக்கு விபத்து ஏற்பட்ட நிலையில் சேலையூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரை, அவரது நண்பர்களை பார்க்க சென்றார்.
அப்போது பார்வையாளர்கள் அமரும் இருக்கையில் முருகன் அமர்ந்திருந்தார். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத மூன்று பேர் பின்பக்கமாக வந்து மறைத்து வைத்திருந்த கத்தியால் தலையில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.