தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோவில் கைது! - காவல்துறை விசாரணை

சென்னை: கொருக்குப்பேட்டை அருகே 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 20 வயது இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

young-man-arrested-for-sexually-harassing-girl
young-man-arrested-for-sexually-harassing-girl

By

Published : Sep 16, 2020, 8:14 PM IST

சென்னை கொருக்குப்பெட்டை அருகே தனது 16 வயது சிறுமிக்கு, அதே பகுதியைச் சேர்ந்த சூர்யா(20) என்ற இளைஞர் பாலியல் தொந்தரவு அளித்ததாக சிறுமியின் பெற்றோர் தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அந்த இளைஞர் குறித்து விசாரித்து வந்துள்ளனர். விசாரணையில் கார்பெண்டராகப் பணி புரியும் சூர்யாவிடம் அதே பகுதியைச் சேர்ந்த சிறுமி நட்பாக பழகி வந்துள்ளார். இதனை தவறாகப் புரிந்து கொண்ட இளைஞர் சிறுமிக்கி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

இதனடிப்படையில் இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய புழல் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:போலி செல்போன் விற்பனை இணையத்தளங்கள்... 2500 பேரிடம் பணத்தை இஎம்ஐயில் சுருட்டிய டெக்கிஸ்!

ABOUT THE AUTHOR

...view details