கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சபரிநாதன்(26). கோயம்பேடு தேவி கருமாரியம்மன் நகரில் வசித்து வரும் இவர் அருகில் உள்ள பர்னிச்சர் கடையில் வேலை செய்து வந்தார். தேர்தலில் வாக்களிப்பதற்காக தனது நண்பர்களுடன் சொந்த ஊருக்குச் சென்ற சபரிநாதன் ஜனநாயக கடமையாற்றிய அடுத்த நாளே சென்னை திரும்பினார். ஊருக்குச் சென்ற அவரது நண்பர்கள் சென்னை திரும்பாத நிலையில், தனியாக இருந்த சபரிநாதனின் அறைக்கதவு நேற்று இரவு வரை திறக்கப்படாததால் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் சந்தேகமடைந்து கோயம்பேடு காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
காதல் தோல்வியால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை - youngster suicide
சென்னை: கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த கோயம்பேடு காவல்துறையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சபரிநாதன் தூக்கு போட்டு இறந்து கிடந்துள்ளார். இதையடுத்து, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது காவல்துறை. மேலும், வழக்குப்பதிவு செய்து சபரிநாதனின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. காதல் தோல்வியால் சபரிநாதன் தற்கொலை செய்து கொண்டிருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.