சென்னை அடுத்த டிபி சத்திரம் 14ஆவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் சரண்யா (23). பட்டதாரியான இவர், அண்ணாநகரில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்துவந்துள்ளார். இவரும் கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஐசக் மனோஜ் குமார் என்பவரும் சில ஆண்டுகளாக காதலித்துவந்துள்ளனர்.
கடந்த சில நாள்களாக சரண்யாவுக்கும், அவரது காதலனுக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, சண்டையிட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலில் இருந்த சரண்யா, நேற்று (பிப். 22) காலை வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
பின்னர் தந்தை சங்கர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, சரண்யா தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து டிபி சத்திரம் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.