தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஐந்தாம் வகுப்பு சிறுமியின் உயிரைப் பறித்த டெங்கு! - school girl maheshwari dengue death

சென்னை: திருவொற்றியூரில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் பள்ளி மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

-dengue-fever

By

Published : Oct 29, 2019, 10:17 AM IST

சென்னையை அடுத்த திருவொற்றியூரில் உள்ள சிவசக்தி நகர் நான்காவது தெருவில் வசிப்பவர் முத்துக்குமார். ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார்.

தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்துவந்தஇவரின் மகள் மகேஸ்வரிக்கு கடந்த மூன்று நாட்களுக்கு முன்பாக காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், தனியார் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். அப்போது சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரியவந்தது. பின்னர் மேல்சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி மகேஸ்வரிக்கு கடந்த இரண்டு நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்துவருவதாகக் கூறிவரும் நிலையில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமி டெங்குவால் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: டெங்குவில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது எப்படி? அறிந்து கொள்ளுங்கள்

ABOUT THE AUTHOR

...view details