சென்னை கேளம்பாக்கம் ஏகாத்தூரில் உள்ள ஓ.எம்.ஆர் சாலையில் 30 மாடிகள் கொண்ட தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு மன்னார்குடியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் வில்லியம் ஜேம்ஸ் என்பவர், தனது மகள் ஜெனிஃபர் (35) உடன் 24ஆவது மாடியில் வசித்து வந்தார். ஜெனிஃபர் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வந்துள்ளார்.
ஆனால், கரோனா ஊரடங்கு காரணமாக ஜெனிஃபர், தனது வேலையை இழந்துள்ளார். பின்னர் பல நிறுவனங்களில் முயற்சி செய்தும் வேலை கிடைக்கவில்லை.இதனால் கடும் மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார்.
மேலும், கடந்த இரு நாட்களாக வீட்டில் யாருடனும் பேசாமல் அறையிலேயே முடங்கிய நிலையில் இருந்துள்ளார். இந்நிலையில் இன்று (ஜூலை 2) அதிகாலை 3 மணியளவில் ஜெனிஃபர், தனது படுக்கை அறையின் ஜன்னல் கதவின் வழியாக 24ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து அவரது பெற்றோர் அளித்த தகவலின் அடிப்படையில் கேளம்பாக்கம் காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.
தற்கொலையை கைவிட அழையுங்கள் அங்கு ஜெனிஃபரின் உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர், பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கேளம்பாக்கம் காவல் துறையினர், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
24ஆவது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை! இதையும் படிங்க:நெஞ்சு வலியால் தனியார் மருத்துவமனைக்குச் சென்ற இளைஞர் உயிரிழப்பு - மகளை முதல் நாளில் ஸ்கூலில் சேர்க்க சென்றபோது நிகழ்ந்த சோகம்!