தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கணவருடன் தகராறு: செல் ஆயில் குடித்து இளம்பெண் தற்கொலை - Chennai crime news

பெரம்பூரில் திருமணமான ஆறு மாதங்களில் கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளம்பெண்
இளம்பெண்

By

Published : Jul 17, 2021, 9:52 PM IST

சென்னை:பெரம்பூர் நீலம் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராமச்சந்திரன் (21) - கீர்த்தனா (21) தம்பதி. இவர்கள் இருவரும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டு நிலையில், அப்பகுதியில் தனியாக வசித்துவந்தனர்.

கணவன்-மனைவி இடையே கடந்த சில நாள்களாகத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தாய், தந்தை இல்லாத நிலையில் கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையால் மனமுடைந்த கீர்த்தனா, கடந்த 16ஆம் தேதியன்று வீட்டில் செல் ஆயிலைக் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதனையடுத்து தகவலறிந்து ராமச்சந்திரன் தனது மனைவி கீர்த்தனாவை மீட்டு ராஜாஜி மருத்துவமனயில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட கீர்த்தனா இன்று (ஜூலை 17) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கீர்த்தனா தற்கொலைக்கான காரணம் குறித்து ரவிச்சந்திரனிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:ஜோலார்பேட்டையில் கோயில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

ABOUT THE AUTHOR

...view details