கரோனா தொற்று நோய் பரவாமல் தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் ஏற்கனவே பதிவு பெற்ற சாலையோர வியாபாரிகளுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியாக ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட்டிருந்தார்.
நிவாரண தொகையைப் பெற வங்கிக் கணக்கு விபரங்களை பதிவு செய்யலாம் - நிவாரணத் தொகையைப் பெற வங்கிக் கணக்கு விபரங்களை பதிவு செய்யலாம்
சென்னை: சாலையோர வியாபாரிகள் ஆயிரம் ரூபாய் நிவாரண தொகையைப் பெற தங்களின் வங்கிக் கணக்கு விபரங்களை மாநகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்யலாம் என ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை மாநகர ஆணையர் பிரகாஷ் கூறுகையில், "மாநகராட்சியில் 27ஆயிரத்து 195 சாலையோர கடை வியாபாரிகள் பதிவு செய்துள்ளனர். இவர்கள் தங்களுக்கான நிவாரண தொகையை பெற அவர்களின் வங்கிக் கணக்கு எண், ஐ.எப்.எஸ்.சி எண், வங்கிக் கிளை, மாநகராட்சி அடையாள அட்டை ஆகியவற்றை ஸ்கேன் செய்து, நகல் எடுத்து சம்மந்தப்பட்ட மண்டல நகர விற்பனை குழு மண்டல அலுவலகங்களிலோ, 9499932899 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலோ, மாநகராட்சி இணையதள மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்பிய வியாபாரிகளுக்கான நிவாரண தொகை சம்மந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:‘கரோனா நிதி ஒதுக்குவதில் பாரபட்சம்’ - கே.எஸ். அழகிரி குற்றச்சாட்டு