அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது 280 கோடி ரூபாய் ஊழல் முறைகேடு புகார்கள் வந்தன. இதனைத்தொடர்ந்து இதுதொடர்பாக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையத்தை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
சூரப்பா மீதான முறைகேடுகள் குறித்து விசாரிப்பதற்காக விக்னேஷ் சாலையிலுள்ள பொதிகை வளாகத்தில் விசாரணை அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை ஆணையத்துக்கு உதவ, உயர் கல்வித் துறை துணைச் செயலாளர் சங்கீதா, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை எஸ்.பி. பொன்னி, உயர் நீதிமன்ற சிறப்பு அரசு வழக்கறிஞர் கார்த்திகேயன், வழக்கறிஞர் சாய் பிரசாத், ஓய்வுபெற்ற நீதித் துறை கூடுதல் செயலாளர் முத்து ஆகியோரை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.