சென்னை:2022-2023 ஆம் ஆண்டின் மருத்துவம் (எம்பிபிஎஸ்) மற்றும் பல் மருத்துவம் (பிடிஎஸ்) ஆகிய படிப்புகளுக்கான அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக மருத்துவ இடங்கள் சேருவதற்கான ஆன்லைனில் செப்டம்பர் 22 ந் தேதி முதல் அக்டோபர் 3 ந் தேதி வரையில் www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org என்ற இணையதளங்களின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
நடப்பாண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் 8,225 இடங்களில் 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்கள் இடங்கள் 455 ம், பல் மருத்துவ படிப்பில் 2,160 இடங்களில் 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்கள் 114 பேரும் சேர்க்கப்பட உள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள 36 அரசு மருத்துவக்கல்லூரியில் 5,050 இடங்களும், கே.கே.நகர் இஎஸ்ஐசி கல்லூரியில் 125 இடங்களும், 20 சுயநிதி மருத்துவக்கல்லூரியில் 3,050 இடங்களும் நிரப்பப்பட உள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டில் 848 இடங்களும் நிரப்பப்பட உள்ளது. சுயநிதி மருத்துவக்கல்லூரியில் 1,290 இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டில் நிரப்பட உள்ளது.