தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு கடந்தாண்டு முதல் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இந்தாண்டிற்கான பொறியியல் கலந்தாய்வு ஜூன் மாதம் 20ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, மே மாதம் 2ஆம் தேதி முதல் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும், கடைசி நாள் மே மாதம் 31ஆம் தேதி என்றும், ஜூன் 3ஆம் தேதி ரேண்டம் எண் வெளியிடப்படும் என்றும், ஜூன் 17ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் படிப்புக்கு மே 2 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - விண்ணப்பிக்க மே 2
சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு மே மாதம் 2ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
உயர்கல்வித்துறை
இதை தொடர்ந்து ஜூன் 20ஆம் தேதி பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு தொடங்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் இணையதள முகவரி நாளை அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.