சீனாவின் வூஹான் நகரில் தோன்றியதாகக் கூறப்படும் கோவிட்-19 (கொரோனா) என்ற வைரஸ் தொற்று, தற்போது உலகம் முழுவதும் பரவிவருகிறது. கடந்தாண்டு டிசம்பர் இறுதியில் பரவத் தொடங்கிய, இந்தத் தொற்று காரணமாக உலகளவில் இதுவரை மூன்றாயிரத்து 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் அச்சுறுத்திவரும் கொரோனா வைரசின் தாக்கம் சீனா, தென் கொரியாவில் குறைந்துவரும் நிலையில், தற்போது ஐரோப்பிய நாடுகளில் அதன் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. இதிலிருந்து தப்பிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வலியுறுத்தி அரசும் பிரபலங்களும் விழிப்புணர்வுகளை மக்களிடையே ஏற்படுத்திவருகின்றனர்.