சென்னை:தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வளம் வரும் யோகி பாபுவை வைத்து குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது தொடர்பாக குறும்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
தூய்மை பணியாளராக யோகிபாபு.. வைரலாகும் புகைப்படம்! - யோகி பாபு நடிக்கும் விழிப்புணர்வு திரைப்படம்
பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபு, சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளராக வீடு தோறும் சென்று குப்பைகளை பெற்று வருவது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சாலையெங்கும் குப்பைகளைப் பெற்று வரும் யோகி பாபு..!
Urbaser Sumeet நிறுவனம் மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் எடுக்கப்படும் இந்தப் படத்திற்காக வீடு வீடாக சென்று குப்பைகளை தரம் பிரித்து வாங்கும் தூய்மை பணியாளர் வேடத்தில் யோகி பாபு நடித்துள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இதையும் படிங்க: அரியர் மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு.! அண்ணா பல்கலைக்கழகம் புதிய அறிவிப்பு..