தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த யோகா ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை - Yoga teacher

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் யோகா ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த யோகா ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை
8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த யோகா ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை

By

Published : Oct 17, 2022, 7:59 PM IST

சென்னை: தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியவர் ஜேம்ஸ் மரிய ஞானராஜ். பள்ளியில் படிக்கும் எட்டு வயது சிறுமி, கடந்த 2015ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி பள்ளி முடிந்து, யோகா பயிற்சிக்கு சென்றுள்ளார். அங்கு, ஆசிரியர் ஜேம்ஸ் மரிய ஞானராஜ், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுசம்பந்தமாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் ஜேம்ஸ் மரிய ஞானராஜ் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீசார், அவரை கைது செய்தனர். பின் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி, குற்றம் சாட்டப்பட்ட ஜேம்ஸ் மரிய ஞானராஜ் மீதான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

இதையும் படிங்க: விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.1.05 கோடி மதிப்புடைய தங்கம் பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details