ஊரடங்கு காலத்தில் இடைவிடாமல் கடந்த இரண்டு மாதங்களாக பணியாற்றி வரும் காவல்துறையினர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கின்றனர்.
இதையடுத்து அவர்களின் பணிச்சுமையை குறைக்கவும், மனதுக்கு புத்துணர்ச்சி அளிக்கவும் சென்னை மாநகர காவல் ஆணையர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
காவலர்களுக்கு புத்துணர்வு அளிக்க யோகா பயிற்சி - புத்துணர்வுக்கான யோகா பயிற்சி
சென்னை: ஊரடங்கு நேரத்தில் இடைவிடாது பணி செய்த காவல்களுக்கு புத்துணர்வு அளிக்கும் விதமாக யோகி பயிற்சி அளிக்கப்பட்டது.
Yoga practice
அதன் ஒரு பகுதியாக சென்னை காவலர்களுக்கு யோகா பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக நேற்று கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து சைதாப்பேட்டை காவல் நிலையத்துக்கு உட்பட்ட 30க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு முதற்கட்டமாக யோகா பயிற்சி இன்று அளிக்கப்பட்டது.
யோகா பயிற்சிக்கு பின்னர், புத்துணர்வுடனும் புதுவாழ்வு பெற்றது போல மகிழ்ச்சியாக இருப்பதாகவும் பயிற்சிக்குப் பின் காவலர்கள் தெரிவித்தனர்.