சென்னை: யானைகவுனி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது.
சென்னை சவுகார்பேட்டையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 நபர்கள் கடந்த நவம்பர் மாதம் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். இதனையடுத்து இறந்துபோனவரின் மகள் பின்கி என்பவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் புலன் விசாரணை செய்து கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 7 நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து இரண்டு துப்பாக்கிகள் இரண்டு கார்கள் இரு சக்கர வாகனம், 6 செல்போன்கள் கைப்பற்றப்பட்டது.
மேலும், இந்த விவகாரத்தில் தீவிர விசாரணையில் காவல் துறையினர் ஈடுபட்டு வந்தனர். இந்த விசாரணையில் ராஜஸ்தானை சேர்ந்த சந்திரதீப் ஷர்மா கொலையாளிகளுக்கு துப்பாக்கி சப்ளை செய்தது தெரியவந்தது. அவரை காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர்.
யானைகவுனி கொலை வழக்கு: மேலும் ஒருவர் கைது! - சவுகார்பேட்டை
இந்த விவகாரத்தில் தீவிர விசாரணையில் காவல் துறையினர் ஈடுபட்டு வந்தனர். இந்த விசாரணையில் ராஜஸ்தானை சேர்ந்த சந்திரதீப் ஷர்மா கொலையாளிகளுக்கு துப்பாக்கி சப்ளை செய்தது தெரியவந்தது.
yaanai kavuni murder case - Gun supplier arrested