சென்னை பூவிருந்தவல்லி நகராட்சிக்கு உட்பட்ட குமணன்சாவடியில் மகளிர் காவல் நிலையம் செல்லும் வழியில் 2ஆயிரம் சதுர அடி நிலத்தை ஒரு சிலர் ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக நகராட்சி அலுவலர்ளுக்கு தகவல் வந்தது.
ரூ. 2 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை அலுவலர்கள் மீட்டனர்! - government place were rescue
சென்னை: பூவிருந்தவல்லி நகராட்சிக்கு சொந்தமான ரூ. 2 கோடி மதிப்புள்ள நிலத்தை அலுவலர்கள் மீட்டனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பூவிருந்தவல்லி வட்டாட்சியர் புனிதவதி, நகராட்சி ஆணையர் டிட்டோ ஆகியோர் காவல்துறை உதவியுடன் ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
இந்நிலையில், அங்கு வந்த ஒரு நபர் நகராட்சி நடவடிக்கையை நிறுத்தும்படி முறையிட்டார். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் நீதிமன்ற உத்தரவின்படிதான் ஆக்கிரமிப்பு அகற்றப்படுகிறது என அலுவலர்கள் தெரிவித்ததையடுத்து அந்த நபர் அங்கிருந்து சென்றார். மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ. 2 கோடி என நகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.