2022ம் ஆண்டின் கடைசி நாளான இன்று இரவு 12.00 மணி அடித்த உடன் 2023ம் ஆண்டின் முதல் நாளை நாம் வரவேற்க தயாராகி வருகின்றோம். உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாடப்பட்டாலும், உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் புத்தாண்டு கொண்டாடப்படுவதில்லை. பூமி தன் ஆயுளில் ஒரு ஆண்டை இழந்து அடுத்த ஆண்டை துவங்குவதை நான் புத்தாண்டாக கொண்டாடினாலும், சூரிய உதயத்தை வைத்து பூமியில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் பகல் இரவு மாறுபடுகிறது.
24 நான்கு மணி நேரம் ஒரு நாளாக கருதப்படுகிறது. ஆனால் பூமியில் புத்தாண்டு மட்டும் 25 மணி நேரம் கொண்டாடப்படுகிறது. உலகின் முதல் நாடாக புத்தாண்டு கொண்டாடும் நாடும் நமது நேரப்படி 2022ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி கொண்டாடுகிறது. ஆனால் உலகின் கடைசி நாடாக புத்தாண்டு கொண்டாடும் நாடு 2023ம் ஆண்டு ஜன.1ல் கொண்டாடுகிறது.
உலகின் உள்ள ஒவ்வொரு நாடுகளும் ஒவ்வொரு நேரத்தில் சூரிய உதயத்தைக் காண்கின்றன, அதற்கேற்றார் போல் அவர்களின் புதுவருடப்பிறப்பும் நமது நேரத்தின் படி வெவ்வேறு நேரங்களில் நிகழ்ந்துள்ளது. சர்வதேச அளவில் நேர ஒழுங்குமுறையைக் கடைபிடிக்க கிரீன் விச் கோடுகளை அடிப்படையாகக் கொண்டு நேரம் வரையறுக்கப்பட்டது.
அதன்படி பசுபிக் பெருங்கடலில் உள்ள தீவுகள் முதலில் புத்தாண்டைக் கொண்டாடுகின்றன. கிரிபாட்டி என்னும் நாட்டில் உள்ள கிரிமதி தீவு தான் முதன் முதலாக புத்தாண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்திய நேரப்படி பகல் 3.30 மணிக்கு அங்கு புத்தாண்டு பிறந்தது.
அதிக மக்கள் வசிக்க கூடிய நாடுகளில் நியூசிலாந்து முதலாவதாக மாலை 4.30 மணிக்கு புத்தாண்டில் அடியேடுத்து வைத்தது. நமது நேரத்தை விட நியூசிலாந்து 7.30 மணி நேரம் முன்னதாக உள்ளது. அடுத்ததாக பெரிய நகரங்களில் ஆஸ்திரேலியா புத்தாண்டை வரவேற்றது. அங்குள்ள புகழ்பெற்ற ஒபேரா ஹவுஸ்-ல் நிகழ்த்தப்படும் புகழ்பெற்ற வானவேடிக்கையைக் காண லட்சக்கணக்கான மக்கள் குவிந்து புத்தாண்டை வரவேற்றனர். உலகின் கடைசி நாடாக அமெரிக்காவிற்கு அருகில் உள்ள பேக்கர் மற்றும் ஹவ்லேண்ட் தீவுகள் கடைசியாக புத்தாண்டில் அடியெடுத்து வைக்கின்றன. அதாவது நமது நேரப்படி அவர்களுக்கு நாளை மாலை 4.30 மணிக்கு தான் புத்தாண்டு.
ஆஸ்திரேலியாவில் வானவேடிக்கைகளுடன் புத்தாண்டு கொண்டாட்டம் கரோனா பிடியில் இருந்து மீண்டு 2 ஆண்டுகளுக்கு பிறகு புத்தாண்டு கொண்டாடப்படுவதால் உலகமெங்கும் இந்த 2023ம் ஆண்டு பிறப்பு வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. கரோனா பிடியில் இருந்து மீண்டாலும் தற்போது மீண்டும் கரோனா பாதிப்பு உயர துவங்கி இருப்பதால் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. நாமும் சமூக பொறுப்புடன் இந்த 2023ம் புத்தாண்டை வரவேற்போம்.
இதையும் படிங்க: New year 2023: 500 வகையான கேக்குகளுடன் களைக்கட்டும் புத்தாண்டு!