சுதந்திர இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவரும், ஆசிரியர் பணியை அர்ப்பணிப்புடன் செய்தவருமான சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5ஆம் தேதியை இந்தியா ஆண்டுதோறும் ஆசிரியர் நாளாகக் கொண்டாடிவருகிறது.
ஆனால், உலக ஆசிரியர் நாள் இன்று (அக்டோபர் 5) உலகெங்கிலும் உள்ள ஆசிரியர் மாணவர்களால் கொண்டாடப்பட்டுவருகிறது.
ஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் கற்பிப்பது அல்ல. ஒழுக்கம், பண்பு, பொது அறிவு, ஆன்மிகம் என அனைத்தையும் எடுத்துத்துரைத்து அவர்களைச் சிறந்த மனிதராக்கும் உன்னத பணி ஆசிரியர் பணி. அப்படிப்பட்ட பணியை மாணவர்களுக்கு அளிக்க தன்னலமற்ற தியாக மனப்பான்மை கொண்டவராகக் கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராக உள்ளவர்கள்தாம் ஆசிரியர்கள்.
மாணவர்களைத் தன்னுடைய குழந்தைகளாகப் பார்க்கும் ஒரே எண்ணம் கொண்டவர்கள் ஆசிரியர்கள்தாம். ஒரு மாணவனை பண்படுத்தி அவரை இந்தச் சமூகத்திற்கு எடுத்துக்காட்டாக மாற்றுகின்ற அறப்பணியே ஆசிரியரது பணி.
உலகளவில் பொதுவாக அக்டோபர் 5ஆம் தேதியும், பல்வேறு நாடுகளில் வெவ்வேறு நாள்களிலும் ஆசிரியர் நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் கல்வி குறித்த மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சிறந்த கல்வியாளர்களையும், கல்வி குறித்தான சிறந்த நிகழ்வுகளையும் எடுத்தியம்புகிறது.
'ஆசிரியர் பணியே அறப்பணி; அதற்கே உன்னை அர்ப்பணி' - வேறு எந்தப் பணிக்கும் (சேவை) கிடைக்காத பெருமை ஆசிரியர்களுக்கு உள்ளது என்பதற்கு இந்தச் சொல்லாடலே சான்று. அவர்களுக்கு இந்த நாளில் நாம் மரியாதை செய்வோம். ஆசியர்கள் அனைவருக்கும் இனிய ஆசிரியர் நாள் வாழ்த்துகள்!
இதையும் படிங்க : பெட்ரோல் விலையை 35 ரூபாயாக குறைக்க மத்திய அரசு தயார் - அண்ணாமலை