சென்னை: கரோனா சூழலில் இருந்து தமிழ்நாட்டை மீட்டெடுக்க உதவிக்கரம் நீட்டுமாறு உலக தமிழர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மக்களின் உயிர் காக்க உதவிக்கரம் நீட்டுங்கள் - ஸ்டாலின் வேண்டுகோள் - மக்களின் உயிர் காக்க உதவிக்கரம் நீட்டுங்கள்
உங்கள் நிதி கரோனாவை முற்றிலுமாக ஒழிக்க உதவியாக இருக்கும். மக்களின் உயிர் காக்க உதவிக்கரம் நீட்டுங்கள். வாழ்க தமிழகம், மீள்க தமிழகம் என ஸ்டாலின் பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள காணொலியில், கரோனா தொற்று பெரும் அச்சுறுத்தலாக மாறிவருகிறது. இதிலிருந்து நாம் மீண்டு வருவோம் என்பதை உங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகம் இரண்டு முக்கியமான நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. ஒன்று நிதி நெருக்கடி, இன்னொன்று மருத்துவ நெருக்கடி. இதை சமாளிப்பதற்கு தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. கரோனா பரவல தடுக்க முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் அரசு நிதியளித்து வருகிறது.
மருத்துவர்கள் கடுமையாக போராடி வருகின்றனர். முதல் அலையை விட கரோனா இரண்டாம் அலை மோசமாக இருக்கிறது. ஆக்ஸிஜன், படுக்கை வசதிகளை அதிகப்படுத்தி வருகிறோம். கரோனா கால நெருக்கடியை சமாளிக்க நிவாரண நிதி அளிக்க கேட்டிருந்தேன். பலரும் நிதி அளித்து வருகின்றீர்கள். நீங்கள் அளிக்கும் தொகைக்கு வருமான வரியில் விலக்கு அளிக்கப்படும். உங்கள் நிதி கரோனாவை முற்றிலுமாக ஒழிக்க உதவியாக இருக்கும். மக்களின் உயிர் காக்க உதவிக்கரம் நீட்டுங்கள். வாழ்க தமிழகம், மீள்க தமிழகம் என பேசியுள்ளார்.
TAGGED:
ஸ்டாலின் வேண்டுகோள்