சென்னை:உலகத் தற்கொலை தடுப்பு தினத்தில் மனிதர்கள் தற்கொலை எண்ணங்களைத் தவிர்ப்பது எப்படி என்பது குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கை தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப்பல்கலைக் கழகம் நடத்துகிறது. உலகத் தற்கொலை தடுப்பு தினம் ஆண்டுதோறும் ஒவ்வொரு செப்டம்பர் மாதம் 10ஆம் நாள் அனுசரிக்கப்படுகிறது.
அதனடிப்படையில், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப்பல்கலைக்கழகத்தில் வரும் 12ஆம் தேதி மதியம் 2 மணியளவில் பல்கலைக்கழக வெள்ளி விழா கலையரங்கில் “உலகத் தற்கொலை தடுப்பு தினம்” தொடர்பாக மனிதர்கள் பிரச்னைகளை எதிர்கொள்வதும் தற்கொலை எண்ணங்களைத் தவிர்ப்பதும் எப்படி? என்பது குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெறுகிறது.