சென்னை: உலக புகைப்பட கலைஞர்களையும், புகைப்பட சிறப்பையும், திறமையையும் போற்றப்படும் வகையில் ஒவ்வொறு ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி உலக புகைப்பட தினம் கடைபிடிக்கப்படுகிறது. கருப்பு வெள்ளை முதல் டிஜிட்டல் வரை இன்று நாம் புகைப்படங்களை விரும்பும் விதத்தில் மாற்றிகொள்ளும் தொழிநுட்பங்கள் வளர்ந்துள்ளன.
காலத்தை உறையவைக்கும் கலைஞர்களை கொண்டாடும் நாளாக உலக புகைப்பட தினம் கடைபிடிக்கப்படும் நிலையில், ஒரு புகைப்படத்திற்கு எவ்வகையான விளக்கமும் கூற தேவையில்லாத நிலையை கொண்டு வருவதே புகைப்பட கலைஞரின் சாமர்த்தியம். புகைப்படமே அதற்கான விளக்கத்தை கூறும் திறன் புகைபடத்திற்கு உள்ளது.
இதையும் படிங்க:நிதி இல்லாததால் தூத்துக்குடி- மதுரை இடையே ரயில் பாதை திட்டம் கைவிட முடிவு?.. பயணிகள் அதிருப்தி!
வியட்னாம் போரில் வீசப்பட்ட குண்டு, வெடித்து உடல் முழுவதும் தீக்காயங்களுடன், தனது இரண்டு கைகளையும் நீட்டி கொண்டு முகம் முழுக்க பயத்துடன் ஓடிவரும் சிறுமியின் புகைப்படம், 19 ஆண்டுகளாக நடந்து வந்த போரையே நிறுத்தியது. அதே போல் 1994ஆம் ஆண்டு சூடானில் நிலவிய உணவு பஞ்சத்தை எடுத்துரைத்த குழந்தையின் புகைப்படம் என செல்லிக் கொண்ட போகலாம்.
புகைப்படம் என்பது மனிதன் மறக்க விரும்பாத நினைவுகளையும், மறக்க முடியாத நினைவுகளையும் எத்தனை காலம் கடந்தாலும் கண் முன் நிறுத்தும் வல்லமை கொண்டவை. இந்நிலையில், உலக புகைப்பட தினத்தையொட்டி சென்னை ஆழ்வார்போட்டையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் ஊடக செய்தியாளர்கள், புகைப்பட கலைஞர்கள் என ஏராளமானோர் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
புகைப்பட கலைஞர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டது மட்டும் இல்லாமல் கேமராவை பெற்று அவர்களை புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார். மேலும், இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் "நிகழ்வுகளை உறைய வைத்தும் - நிஜங்களைக் கலையாக்கியும் வரலாற்றில் நிலைபெறுகின்றன நிழற்படங்கள்" இவ்வாறு பதிவிட்டு உள்ளார்.
இதையும் படிங்க:World Photography Day : போரை நிறுத்திய புகைப்படத்தின் கதை தெரியுமா? டாகுரியோடைப் முதல் ஸ்மார்ட்போன் வரை புகைப்படம் கூறும் வரலாறு!