தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தன்னுயிர் கருதாது மண்ணுயிர் காக்கும் செவிலித்தாய்களை வாழ்த்துகிறேன்' - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் - World Nurses' Day

உலக செவிலியர் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலக செவிலியர் தினம்-மு.க ஸ்டாலின் வாழ்த்து
உலக செவிலியர் தினம்-மு.க ஸ்டாலின் வாழ்த்து

By

Published : May 12, 2021, 3:42 PM IST

இன்று (மே.12) உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.

அதில், 'மக்களின் உயிர் காக்கும் மகத்தான சேவையில் தாயுள்ளத்துடன் ஈடுபடுபவர்கள் செவிலியர். இங்கிலாந்தைச் சேர்ந்த ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் எனும் செவிலியர், போர்க்களத்தில் காயம்பட்ட வீரர்களுக்குச் சிகிச்சை அளித்து தாய் மனதிற்குரிய பரிவுகாட்டியவர். அவரைச் சிறப்பித்து செவிலியர் அனைவரின் பணியையும் போற்றிடும் நாளாக இந்நன்னாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

கரோனா பேரிடர் காலமும் போர்க்களத்திற்கு இணையானது தான். இதில் முன்கள வீரர்களாகக் கடமையாற்றும் இருபால் செவிலியருக்கும் நன்றி கலந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளும் பேரிடர் காலப் பணிகளில் அர்ப்பணிப்பு உணர்வுடன் துணைநிற்கும் செவிலியரின் நலன்களும் உரிமைகளும் காக்கப்படும் என்பதைத் தெரிவித்து, தன்னுயிர் கருதாது மண்ணுயிர் காக்கும் செவிலித்தாய்களை வாழ்த்துகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:முன்னாள் சிபிஐ அலுவலர் ரகோத்தமன் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details