தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சர்வதேச குங்ஃபூ போட்டி: பதக்கம் வென்ற தமிழர்கள் - sports

சென்னை: உலக அளவில் நடைபெற்ற குங்ஃபூ சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் வெண்கலம், வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

வீரர்கள்

By

Published : Jun 20, 2019, 2:57 PM IST

உலக அளவில் நடைபெற்ற குங்ஃபூ சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் எமிசான் நகரத்தில் நடைபெற்றது. 48 நாடுகள் கலந்துகொண்ட இந்தப் போட்டியில் இந்தியாவிலிருந்து கலந்துகொண்ட 18 பேரில் ஆறு பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கார்த்திகேயன் வெள்ளிப்பதக்கமும் ஸ்வேதா, ஸ்ருதி ஆகிய இருவரும் வெண்கலப்பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளனர்.

பதக்கம் வென்ற தமிழர்கள்

இந்நிலையில், பதக்கம் வென்று சென்னை திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன்பின்னர் பதக்கம் வென்ற வீரர்கள் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினர்.

அப்போது, சர்வதேச அளவில் நடைபெற்ற குங்ஃபூ போட்டியில் பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. போட்டி மிகவும் கடினமாக இருந்தாலும் எங்களுக்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர்களுக்கும், பெற்றோர்களுக்கும் நன்றி. ஒலிம்பிக்கில் கலந்துகொண்டு தங்கம் வெல்வதே எங்களது லட்சியம் என அவர்கள் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details