சென்னை ஆவடியில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை ஐந்தாம் தளவாடம் அமைந்துள்ளது. இந்த காவல் படை வளாகத்தில் இன்று உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி விதவிதமான மூலிகை செடி விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் கமாண்டர் மகேந்திரன் தலைமையேற்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட விதைகளை நட்டார்.
நாளைய உலகிற்காக விதையை விதைத்த போலீசார்! - மரங்கள் நடுவது
சென்னை: ஆவடியில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர் சார்பில் பல்வேறு மூலிகை செடி விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
காவல்துறையினர்
இவருடன் ஐந்தாம் படைபிரிவைச் சேர்ந்த காவலர்கள் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விதைகளை நட்டனர். இது குறித்து கமாண்டர் மகேந்திரன் கூறுகையில்,"தண்ணீர் பற்றாக்குறை உள்ள இக்காலத்தில் மரக்கன்றுகள் நடுவது சரியாக இருக்காது என்பதால் மரக்கன்று விதைகளை நட்டு நர்சரி பண்ணை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. குதிரை புங்காமரம், மலை வேம்பு, பூவரசு, மூலிகை செடி போன்ற விதைகள் நட்டு நர்சரி பண்ணை அமைக்க வேண்டும்" என்றார்.