சென்னை :13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி பல்வேறு நகரங்களில் நடைபெற்றது. இந்நிலையில், இன்று (நவ.19) இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளிக்கு இடையே இறுதி போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.
இதில், டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த ஆஸ்திரேலியா தொடக்கத்தில் இருந்தே அசாத்திய ஃபீல்டிங்கில் இந்திய அணிக்கு டஃப் கொடுத்தது. இதையடுத்து 240 ரண்களில் இந்திய அணியை ஆட்டமிழந்தது. 241 எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் களமிறங்கிய ஆஸ்திரேலியா தொடக்கத்தில் நிலைகுலைந்தாலும், பின்னர் சுதாரித்து அபாரமாக விளையாடியது.
இறுதியாக 43 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதையடுத்து உலக கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவிய இந்திய அணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து உள்ளார்.