தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"கிரிக்கெட்டைப்போல் செஸ் ஐ.பி.எல் போட்டி" - உலக சதுரங்க கூட்டமைப்பு துணைத்தலைவர்! - Chess IPL starts soon

சென்னை: கிரிக்கெட்டைப்போல் செஸ் ஐ.பி.எல். போட்டிகளை நடத்த வேண்டும் என உலகச் சதுரங்க கூட்டமைப்பின் துணைத்தலைவர் நிகேல் சார்ட் தெரிவித்துள்ளார்.

உலக சதுரங்க கூட்டமைப்பு துணை தலைவர்
உலக சதுரங்க கூட்டமைப்பு துணை தலைவர்

By

Published : Dec 5, 2019, 10:02 AM IST

சென்னையில் சதுரங்க(செஸ்) தொடர்பான கருத்தரங்கம் நடைபெறுகிறது. இந்த கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக உலக சதுரங்க விளையாட்டு கூட்டமைப்பு துணைத்தலைவர் நிகேல் சார்ட் சென்னை வருகை தந்தார். அவரை விமான நிலையத்தில் தமிழ்நாடு சதுரங்க அமைப்பு நிர்வாகிகள் வரவேற்றனர்.

உலக சதுரங்க கூட்டமைப்பு துணை தலைவர்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிகேல் சார்ட் கூறுகையில்," சென்னையில் செஸ் விளையாட்டுகளை ஊக்கப்படுத்துவதற்கு வந்துள்ளேன். சென்னையில் செஸ் விளையாடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இந்தியாவில் கிரிக்கெட்டிற்கு முக்கியத்துவம் தரப்படுவதுபோல், செஸ் விளையாட்டிற்கும் முக்கியத்துவம் தரவேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, கிரிக்கெட்டை போல் செஸ் ஐ.பி.எல் போட்டிகளை நடத்த திட்டமிட்டோம். ஆனால் சில காரணங்களால் நடத்த முடியாமல் போனது. எனவே, விரைவில் செஸ் ஐ.பி.எல். போட்டிகளை நடத்த திட்டமிட்டு வருகிறோம். செஸ் போட்டிகளில் இளம் வீரர்கள் அதிகமாக உருவாகி வருகின்றனர் என்றார்.

இதையும் படிங்க: 'நிகழ்ச்சியில் கை கொடுக்க மறந்துட்டேன்' - சிறுமியின் இல்லத்திற்கே சென்ற அபுதாபி இளவரசர்!

ABOUT THE AUTHOR

...view details