சென்னை மெரினா கடற்கரை சாலையில் நிறுவப்பட்டுள்ள உழைப்பாளர் சிலைக்கு, 136ஆவது மே தினத்தை முன்னிட்டு அமைப்புசாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அதில் கூட்டமைப்பினர் அனைவரும் மே தின உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.
அமைப்புசாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கூட்டமைப்பு உறுப்பினர் கீதா கூறியதாவது, "கரோனா இரண்டாம் அலையில் அமைப்புசாரா தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்துவிட்டனர். அவர்களுக்கு கரோனா நிவாரணமாக ரூ.5 ஆயிரத்தை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும். ரேஷன் பொருள்கள் இலவசமாக வீடு தேடி கொடுக்க வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர்களின் நல வாரியங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் பூரண மது விலக்கு, போதை பொருள்கள் விற்பனையை தடை செய்ய வேண்டும். கரோனா காலத்தில் மருத்துவ வசதியை ஏற்படுத்தி தர உத்தர வாதம் அளிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மு.க. ஸ்டாலின் ‘மே தின’ வாழ்த்து!