சென்னை: மேடவாக்கம் கூட்ரோடு ஐயப்பன் நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (30). ராஜா அண்ணாமலைபுரம் விசுவநாதன் சாலையில் உள்ள பிரபல நாட்டுப்புறப் பாடகரான புஷ்பவனம் குப்புசாமியின் வீட்டில் கடந்த ஒரு வார காலமாக சரவணன் கட்டட வேலையில் ஈடுபட்டுவந்தார்.
நேற்று (நவ. 12) அவர் கலவை தூக்கும் இயந்திரத்தை இயக்கும் பணியில் ஈடுபட்டார். பின்னர் பணியை முடித்துவிட்டு சரவணன் கலவை தூக்கும் இயந்திரத்தின் சுவிட்சை மறந்து ஆப் செய்யாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.