தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மரம் இல்லாமல் மரப் பலகை- இயற்கை மீது கொண்ட காதலால் அரிய கண்டுபிடிப்பு! - நெல் உமியிலிருந்து மரப்பலகை

சென்னையை சேர்ந்த ஒருவர் விவசாய கழிவுகள் மூலம் இயற்கையான முறையில் நீடித்து உழைக்கும் மரப்பலகைகளை உருவாக்கி அசத்தி வருகிறார்.

மரம் இல்லாமல் மரப் பலகை- இயற்கை மீது கொண்ட காதலால் அறிய கண்டுபிடிப்பு!
மரம் இல்லாமல் மரப் பலகை- இயற்கை மீது கொண்ட காதலால் அறிய கண்டுபிடிப்பு!

By

Published : Jul 14, 2022, 4:05 PM IST

Updated : Jul 15, 2022, 9:30 AM IST

சென்னை: மனிதர்கள் பயன்பாட்டிற்காகவும் வணிக பயன்பாட்டிற்கும் ஒரு வருடத்திற்கு கிட்டத்தட்ட 15 பில்லியன் மரங்கள் அழிக்கப்படுகிறது. இயற்கை மீது காதல் கொண்டர்வகள் பலர் அதனை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். அந்த வகையில் இயற்கை மீது காதல் கொண்ட சென்னையைச் சார்ந்த பெங்கானி என்பவர் மரம் இல்லாமல் விவசாய கழிவுகளை பயன்படுத்தி இந்தோவுட் என்ற நிறுவனம் மூலம் மரப் பலகையை தயாரித்து வருகிறார்.

மாற்று யோசனை: பெங்கானி தனது சிறு வயது முதல் மரப்பலகை மற்றும் மர பொருட்கள் சார்ந்த தொழிலிலே இருந்துள்ளார். இவர் பல வருடங்களுக்குப் பிறகு தனது சொந்த மரப்பலகை மற்றும் மர பொருட்கள் உருவாக்கும் நிறுவனத்தைத் தொடங்கினார். ஒருநாள் அவர் நாம் ஏன் இயற்கையை அழிக்க வேண்டும், பசுமை காடுகளை அழிக்க வேண்டும், சுற்றுப்புறச் சூழலுக்கு சீர்கேடு வராத வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார், அதன் விளைவாக 2019 இல் இந்தோவுட் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்.

நெல் உமியிலிருந்து மரப்பலகை:இந்த நிறுவனம் விவசாயிகளிடம் இருந்து நெல் உமி பெற்று நன்றாக அரைத்து அதனுடன் சில கனிமங்களை சேர்த்து மரப்பலகை மற்றும் மர பொருட்கள் செய்து வருகிறது. இது தொடர்பாக நம்மிடம் பேசிய பெங்கானி "வட இந்தியாவில் நெல் உமி, கோதுமை உமி உள்ளிட்ட விவசாய கழிவுகளை எரிப்பதைக் கண்டேன். இதனால் காற்று மாசுபடுகிறது. அதுமட்டுமின்றி மனிதர்களுக்கும் இது பாதிப்பு ஏற்படுகிறது. இதனை வைத்து ஏதாவது செய்ய முடியுமா என்று நினைத்தேன். பிறகு சென்னையில் மரம் இல்லாமல் மரப்பலகை செய்வதற்கு இந்த உமிகளை பயன்படுத்தலாம் என முடிவு செய்தேன்.

கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் பல்வேறு ஆராய்ச்சிகள், பல்வேறு நிபுணர்கள் உடன் ஆலோசனை செய்து இதை எப்படி உருவாக்கலாம் என்று திட்டமிட்டேன். எங்கள் தொழிற்சாலையை சுற்றிக் கிட்டத்தட்ட 10 கிலோமீட்டர் அளவிற்கு பல்வேறு விவசாய நிலங்கள் உள்ளது. அவர்களிடம் இருந்து நெல் உமிகளை பெறுகிறோம்" என தெரிவித்தார்.

மரம் இல்லாமல் மரப் பலகை - இயற்கை மீது கொண்ட காதலால் அரிய கண்டுபிடிப்பு!

நீர் மற்றும் நெருப்பால் பாதிப்பில்லை: இது தொடர்பாகப் பேசிய பெங்கானி, " மக்கள் பல லட்ச ரூபாய் கொடுத்து வீட்டிற்கு மரத்தாலான நாற்காலிகள் மேஜைகள் உள்ளிட்டவை வாங்குகின்றனர். ஆனால் அது கொஞ்ச நாட்களிலேயே வீணாகப் போய்விடுகிறது, இதையும் கவனத்தில் கொண்டோம். இங்கு உருவாக்கப்படும் பொருட்கள் நீர் மற்றும் தீயால் பாதிக்கப்படாது, இது வாழ்நாள் முழுவதும் தரமாக உழைக்கும்” என்றார்.

மேலும் தமிழ்நாட்டைத் தவிர ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும் அரசு இதற்கு அனுமதி வழங்கியுள்ளது. சாதாரணமாக செய்யப்படும் மரப்பலகையில் கலக்கும் எந்த ஒரு ரசாயனப் பொருட்களும் இதில் கலப்பதில்லை. வெளியில் கிடைக்கும் மரப்பலகை விலைக்கு சமமாக இந்த உமியால் செய்யப்படும் மரப்பலகையும் இருக்கும். ஆனால் இந்த பலகையின் பொருட்கள் வாழ் நாள் முழுவதும் வரும் எனவும் அவர் தெரிவித்தார்.

சுற்றுச்சூழலுக்கு தீங்கில்லை:மேலும் ஒரு நாளைக்கு 25 டன் மரப் பலகை தயாரிப்பதற்கு 15 டன் நெல் உமி தேவைப்படுகிறது. இந்தியாவில் 22 நகரத்தில் இந்தோவுட் நிறுவனத்தை விரிவு செய்து விட்டோம் ஆஸ்திரேலியா, ஓமன் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் விரிவு செய்ய இருக்கிறோம்" என தெரிவித்தார். விவசாயக் கழிவிலிருந்து செய்யப்படும் மரப்பலகையால் மனிதர்களுக்கு இயற்கைக்கு எந்த ஒரு தீங்கும் ஏற்படாது. அதுமட்டுமின்றி விலங்குகள் பறவைகளும் பாதுகாக்கப்படுகிறது என இந்தோவுட் நிறுவனர் பெங்கனி கூறினார்.

இதையும் படிங்க:மரத்தூள்கள் மூலம் வீட்டு உபயோகப்பொருட்கள் செய்து அசத்தும் நபர்

Last Updated : Jul 15, 2022, 9:30 AM IST

ABOUT THE AUTHOR

...view details