கரோனாவால் உயிரிழந்த கணவன், மனைவி, மகன் தற்கொலை - chennai district news
சென்னையில் கணவன் கரோனாவால் உயிரிழந்த நிலையில் மனைவி, மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
women-suicide-in-chennai
சென்னை:வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் பால ஈஸ்வரி (43). இவரது மகன் லட்சித் நாராயணன் (8). பால ஈஸ்வரியின் கணவர் வில்லிவாக்கத்தில் செல்போன் கடை நடத்திவந்தார். இவர் கடந்த மே மாதம் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த பால ஈஸ்வரி தனது மகனுடன் சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் ஹவுசிங் காலனியில் வசித்துவரும் அவரின் அக்கா முத்துலட்சுமி வீட்டில் தங்கியிருந்தார்.
இதையடுத்து, தகவலறிந்த சேலையூர் காவல் துறையினர் இருவரது உடல்களையும் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரித்துவருகின்றனர்.