தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து பெண் தீக்குளிக்க முயற்சி! - காவல்துறை ஆணையாளர் அலுவலகம்

சென்னை: மோசடி புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்காத காவல்துறை அலுவலர்களை கண்டித்து, பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

CASE

By

Published : Aug 5, 2019, 6:56 PM IST

சென்னை, துரைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஃபாத்திமா(55). இவர் அதே பகுதியைச் சேர்ந்த பகதூர் என்பவரிடம் 10 சவரன் நகை, 30 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிய பகதூர் பலநாட்களாக திருப்பி தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.

பெண் தீக்குளிக்க முயற்சி

இதுகுறித்து கண்ணகி நகர் காவல் நிலையத்தில் ஃபாத்திமா புகார் அளித்துள்ளார். ஆனால், புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்காததால் விரக்தியடைந்த ஃபாத்திமா, காவல்துறை ஆணையாளர் அலுவலகம் முன்பு திடீரென மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள், உடனடியாக தண்ணீரை ஊற்றி ஃபாத்திமாவை காப்பாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தண்ணீரை ஊற்றி காப்பாற்றிய காவலர்கள்

ABOUT THE AUTHOR

...view details