தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலை வசதி கோரி பெண்கள் நூதன ஆர்ப்பாட்டம்! - chennai

சென்னை: திருநின்றவூரில் சாலை வசதிக்கேட்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை

By

Published : Aug 16, 2019, 9:55 PM IST

ஆவடி அடுத்த திருநின்றவூர், பெரியார் நகரில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் அதில் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தியாகுவதால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

இது குறித்து திருநின்றவூர் பேரூராட்சியில் பல முறை புகார் அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால் அப்பகுதி மக்கள் அனைத்து இந்திய மாதர் சங்கத்தோடு இணைந்து சாலையில் முட்டிபோட்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், அங்குவந்த காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து போக சொல்லியும் அவர்கள் போகாமல் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர அங்கிருந்த பெண்கள் உள்பட ஐம்பதுக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து அருகிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

சாலை வசதிக்காக பெண்கள் நூதன ஆர்ப்பாட்டம்

ஒரே பகுதியைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details