சென்னை பழைய பல்லாவரத்தில் அம்பேத்கார் சிலை, அம்பேத்கர் மன்றம், அம்பேத்கர் கலையரங்கம் ஆகியவற்றை அகற்றி அதில் அரசு பத்திரப்பதிவு அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், கட்டபடவுள்ளதாக பல்லாவரம் வட்டாச்சியர் ராஜா தலைமையில் சில தினங்களுக்கி முன்பு அறிவிக்கப்பட்டது.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இந்நிலையில் இன்று மீண்டும் அம்பேத்கார் சிலை, இரவு பாட சாலை, கலையரங்கம் ஆகிய கட்டடங்கள் அகற்றபோவதாக தகவல் கிடைத்துள்ளது.