தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவல் துறையினரால் பாதிக்கப்பட்ட 15 பேருக்கு ரூ. 75 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு - காவல்துறையினரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவு

காவல்துறையினரால் மானபங்கம் செய்யப்பட்டு, அத்துமீறலால் பாதிக்கப்பட்ட ஆறு பெண்கள் உள்பட 15 பேருக்கு தலா 5 லட்சம் ரூபாய் வீதம் 75 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Human rights commission
Human rights commission

By

Published : Dec 21, 2021, 11:08 PM IST

சென்னை:விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரை அடுத்த டி.மண்டபம் கிராமத்தைச் சேர்ந்த இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த காசி என்பவரை, கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பரில் திருக்கோவிலூர் காவல் துறையினர் அழைத்துச் சென்றனர்.

பின்னர் இரவு 8 மணிக்கு, அவரது மனைவி லட்சுமி, மாமனார் குமார், சகோதரிகள் ராதிகா, வைத்தீஸ்வரி, சகோதரர்கள் படையப்பா, மாணிக்கம் என ஆறு பெண்கள் உள்பட 14 பேரை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

நான்கு பெண்களை தைலாபுரம் தோப்புக்கு அழைத்துச் சென்று, மானபங்கம் செய்ததாகக் கூறி, திருக்கோவிலூர் காவல் நிலைய ஆய்வாளர் சீனிவாசன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமநாதன், ஏட்டு தனசேகரன், காவலர்கள் பக்தவச்சலம், கார்த்திகேயனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட பெண் லட்சுமி, விழுப்புரம் கூடுதல் எஸ்பியிடம் புகார் அளித்தார்.

கையில் எடுத்த மனித உரிமை ஆணையம்

இதுசம்பந்தமாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இந்த வழக்கை விசாரித்த ஆணைய உறுப்பினர் துரை.ஜெயச்சந்திரன், இரவு நேரத்தில் பெண்களை காவல் நிலையத்தில் வைத்திருக்கக் கூடாது என்ற உத்தரவை மீறி, ஆறு பெண்களை காவல் நிலையத்தில் வைத்ததுடன், ஆண்களையும் தாக்கியது நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, பாதிக்கப்பட்ட 15 பேருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் வீதம் 75 லட்சம் ரூபாயை இழப்பீடாக ஒரு மாதத்திற்குள் அரசு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும், சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை அலுவலர்களுக்கு எதிரான துறை ரீதியிலான நடவடிக்கையில் மூன்று மாதங்களில் உத்தரவு பிறப்பிக்க தமிழ்நாடு டிஜிபிக்கு உத்தரவிட்ட ஆணையம், காவல்துறையினருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்கில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: திமுக அதிமுக இடையே மோதல் - எம்எல்ஏ ஜெயராமன் மீது தாக்குதல்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details