பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், அடக்குமுறை குறித்து திமுக துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் காணொலி கட்சி மூலம் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், “கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் நடைபெறும் குற்றங்களில் பெண்கள் மீது 31 விழுக்காடாக உள்ளது. பொள்ளாச்சி விவகாரம் உள்ளிட்டவற்றுள் சிக்கியவர்கள் சுதந்திரமாக உள்ளனர். பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு சட்டங்கள் இருந்தாலும் நடைமுறைப்படுத்துவதில் தாமதமாகிறது. அதனை விசாரிப்பதற்கு காவலர்களின் எண்ணிக்கையும் போதுமான அளவில் இல்லை” எனத் தெரிவித்தார்.