சென்னை:ஜார்கண்ட் மநிலத்தை சேர்ந்த கும்கும்குமாரி (19), பூனம் (20), ஊர்மிலா குமாரி (24) மூவரும் தாம்பரம் அடுத்த கடப்பேரியில் உள்ள மகளிர் விடுதியில் தங்கி சானடோரியம் மெப்ஸில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
நேற்று (ஜன 16) விடுதியின் மேல் தளத்தில் பவர் பேங்கில் சார்ச் செய்த படி உயர் மின் அழுத்த கம்பி அருகே நின்றுகொண்டிருந்த கும்குக்குமாரி செல்போனில் பேசிகொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. அதே போல் அறையில் செல்போனில் சார்ஜ் செய்த படி பேசிகொண்டிருந்த பூனம் மற்றும் ஊர்மிலா குமாரி மீதும் மின்சாரம் பாய்ந்தது.
இதில் கும்கும்குமாரிக்கு 75 சதவிகிதம் தீக்காயம் ஏற்பட்டது. மற்ற இருவருக்கும் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த மற்ற பெண்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் பலத்த காயமடைந்த கும்கும்குமாரியை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கும், லேசான காயமடைந்த இருவரை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கும்கும்குமாரி உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதால் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து வந்த தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் கூடியதால் பெரும் பதற்றம் நிலவியது.
இதையும் படிங்க: China Manja: சீன மாஞ்சா நூல் அறுத்து சிறுவன் காயம்.. 120 தையல் போட்டு உயிர் மீட்பு...